ஆண்களின் உடனடிச் செயற்பாட்டிற்கான அழைப்பு
The image contains a megaphone and text that says "A Call to Action for Men"

பால்நிலைச் சமத்துவ நீதிக்கான ஆண்களுடன் செயலாற்றும் கூட்டணி (MenEngage Alliance), இலங்கையில் பால்நிலைச் சமத்துவத்திற்காக ஆண்கள் மற்றும் ஆண்பிள்ளைகளுடன் இணைந்து செயலாற்றும் சமூக மாற்றத்திற்கான வலையமைப்பாகும். கடந்த சில வாரங்களாக வெளிவந்த சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்கள், பாலியல் சுரண்டல் சம்பவங்கள் மற்றும் பணியிடங்களில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் தொடர்பாக எமது கடுமையான கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறான பாலியல் வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அச்சமூட்டும் சம்பவங்கள் தொடர்பாக எமது கண்டத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அண்மைக் காலத்தில் #MeToo (நானும் ஒருவர் இயக்கத்தின் ) குற்றச்சாட்டுக்களின் கீழ் இலங்கையில் ஊடகங்கள் மற்றும் செய்தி அறைகளில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் தொல்லைகள் பற்றி வெளிகொணரப்பட்டிருந்தது. அத்துடன் 15 வயது சிறுமியொருவர் பாலியல் வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டமை மற்றும் 16 வயதுடைய சிறுமியொருவரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட விமர்சனங்களை வெளிக்கொண்டு வந்திருந்தது. இவ்வாறான சம்பவங்களுக்கு நாம் ஒவ்வொரு தனிநபரும் குற்றவாளிகளும் பொறுப்புக் கூற வேண்டியதுடன், இவற்றின் அடிப்படைக் காரணிகளைக் கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணல் மற்றும் அர்த்தமுள்ள சமூகம், கட்டமைப்பு மற்றும் கொள்கை ரீதியான விடயங்களை மாற்றுவதற்கு ஊக்குவித்தல் பால்நிலைச் சமத்துவத்துவக் குறிக்கோள்களுக்கு ஏற்புடையதாக அமையும்.

பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக சட்டங்களை வகுப்பதில் இலங்கை குறிப்பிடத்தக்களவு அடைவுகள் அடைந்துள்ள போதிலும், இலங்கையில் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள் இன்றும் அதிகரிக்கும் தன்மை மிகவும் கவலைக்குரிய விடயமாகவுள்ளது. ஆணை முதன்மைப்படுத்தும் சமூக கலாச்சார பொருளாதார அரசியல (patriarchal) நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகளின் காரணமாக பெண்களுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறைகள் இயல்பு நிலைமையாவதற்கு ஒரு காரணமாக உள்ளது. மேலும், வீட்டிலும், பாடசாலையிலும் பிரதான ஊடகங்கள் வாயிலாகவும் ஆண்மைத்துவத்தை வரையறுத்துக் கற்பிக்கும் விதங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக எடுத்துரைத்து மீளக் கற்றுக் கொள்ளும் விதங்கள் மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது. இலங்கையில் கூடுதலான சட்டங்கள் மற்றும் நிர்வாக நிறுவனங்களில் ஆண்மையை நடைமுறைப்படுத்தும் விதமும் அவற்றை ஊக்குவிக்கும் விதங்கள் பற்றியும் நாம் அறிந்துள்ளோம். இது ஆண்கள், பெண்கள் மற்றும் வேறு பாலினத் தனித்துவ அடையாளங்களுக்கிடையே அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகளின் சமத்துவமற்ற நிலைமைக்குக் காரணமாக அமைகின்றது. அதற்கும் மேலதிகமாக, மேற்குறிப்பிட்டுள்ள வன்முறைச் சம்பவங்களுக்குத் தண்டனை கிடைக்காமை அவ்வாறான அதிகார சமநிலையற்ற கலாச்சாரத்தை உருவாக்குகின்றது.

தொடர்சியாக இடம்பெற்று வரும் இவ்வாறான சம்பவங்களுடன் அண்மைய சம்பவங்கள் மக்களையும் ஊடகங்களையும் ஆத்திரமூட்டும் விடயங்களாக அமைந்துள்ளதுடன், இவற்றிற்கு எதிராக ஆண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தனர். சமூக அநீதிகள், அனைத்துவித பாலியல் மற்றும் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகளுக்கு தீர்வு காணும் போது ஆண்கள் மற்றும் ஆண்பிள்ளைகள் நட்பு வட்டமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென இலங்கை பால்நிலைச் சமத்துவ நீதிக்கான ஆண்களுடன் செயலாற்றும் கூட்டணி நம்புகின்றது. ஆண்கள் மற்றும் ஆண்பிள்ளைகளுடன் செலாற்றும் போது,

• எங்களைச் சுற்றியுள்ளவர்களின் பல்வகைத்தன்மைகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கவும்
• மதிப்பு மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தொடர்புகளைக் கட்டியெழுப்பவும்
• எமது சமூகத்திலும், ஆண்கள் நட்பு வட்டங்களிலும் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும்
• விருப்பமாயின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு வலுவூட்டவும்
• கூட்டாகத் தீர்மானம் எடுப்பதை உறுதி செய்யவும்
• அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவும்

கூட்டணியாக, ஆண்மைத்துவ வன்முறைகளுக்கு சவால் விடுப்பதற்கும் பால்நிலை சமத்துவத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகாரங்களின் சமநிலையற்ற தன்மையை நிவர்த்தி செய்வதற்கும் நாங்கள் முன்வந்துள்ளோம். எமது செயற்பாடுகள் கூட்டு முயற்சிகளின் கோட்பாடுகளுக்கமைவாகவும், மற்றவர்களிடையே வெளிப்படைத்தன்மை, பாரபட்சம் காட்டாமை போன்றவற்றை மையமாகக் கொண்டுள்ளதுடன், பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகளைத் தடுப்பதற்கும், செயற்படுவதற்கும் ஆண்கள் நட்பு வட்டத்துடன் இணைந்து செயலாற்றும் போது இவ்வாறான விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதை உறுதி பூணுகின்றோம். எமது கூட்டு நோக்கமானது, ஆணை முதன்மைப்படுத்தும் சமூக கலாச்சார பொருளாதார அரசியல் (patriarchal) முறைமை மற்றும் நடைமுறைகளை தகர்த்தெறிவதும், எமது நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகள் பற்றி உள்ளார்ந்த ரீதியாகப் பார்த்தல், களநிலைமைகளின் உண்மைத்தன்மை பற்றிக் கவனத்தைச் செலுத்துதல், இவ்வாறான துர்நடத்தைகள் இடம்பெறும் போது அதுபற்றி கவனம் செலுத்துதல், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தொடர்ச்சியான உந்துதலை ஏற்படுத்துதல் போன்றனவாகும். அதிகாரம் மற்றும் சமநிலையற்ற கட்டமைப்புக்களால் தமது வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படுவதை ஆண்கள் சிந்திக்க வேண்டியதுடன், அதன் மூலம் அவர்களுடன் தொடர்புபட்டுள்ள பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் வாழ்விலும் பாதிப்பு ஏற்படுகின்றது.

இலங்கையில் பால்நிலைச் சமத்துவ நீதிக்கான ஆண்களுடன் செயலாற்றும் கூட்டணி, இக்கவலைக்குரிய விடயத்திற்குத் தீர்வு காண்பதற்காக மிகவும் சிறந்த நட்பு வட்டங்கள் மற்றும் பங்காளர்களாக செயலாற்றுமாறு அனைத்து ஆண்கள் மற்றும் ஆண்பிள்ளைகளை இத்தருணத்தில் வேண்டி நிற்கின்றது.

ஆகவே, தனிநபர்கள், ஆண்கள், ஆண் பிள்ளைகள், தந்தையர்கள், சகோதரர்கள், துணைவர், நண்பர்கள், காதலர்கள், பங்காளர்கள், தலைவர்கள், உத்தியோகத்தர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தீர்மானம் எடுப்பவர்கள், சேவை வழங்குனர்கள், சமூக மட்டத் தலைவர்கள் அனைவரும் தமது தொழில் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பலதரப்பட்ட வகிபாங்குகளில் தமது ஆண்களின் பலத்தையும், தமது அதிகாரத்தையும் சிறப்புரிமைகளையும் மீள்பரிசீலனை செய்வதினூடாக உண்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு “மேலதிகமாக எதையாவது செய்வோம்” எனும் தொனிப்பொருளில் நாங்கள் மற்றவர்களுடன் அணி திரள்வதற்கு அழைக்கின்றோம். அதிகமான ஆண்கள் தங்களுடைய பிள்ளைகளுக்காக அர்ப்பணிப்புக்களை மேற்கொள்வதுடன், அவர்கள் எந்தவொரு பிள்ளையையும் அவர்கள்;; பால்நிலையைக் கருத்தில் கொள்ளாது, வன்முறைகளுக்கு அச்சப்படாமல் எந்தச் சூழலிலும் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்கும் உலகில் வளர்வதற்கு விருப்புகின்றார்கள் என்பதில் ஐயமில்லை.
வன்முறை கலாச்சாரத்தை மாற்றுவதற்காக கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதனூடாக முடியுமென நாம் நம்புகின்றோம்.

 • பார்வையாளர்களாக இருப்பதை நிறுத்துவோம் – வன்முறையாளர்களைப் பெயர் குறிப்பிட்டுக் கூறவும் ஆணை முதன்மைப்படுத்தும் சமூக கலாச்சார பொருளாதார அரசியல் (patriarchal) முறைமைக்கு சவால் விடுப்பதற்கு நேர்நிறைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
 • நீங்கள் அது பற்றிக் கவனம் செலுத்துவதாகக் கூறுங்கள்
 • அவருடைய வன்முறை அவரின் துணை, அவரின் பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கு செய்யும் தீங்கு என்பதை அவருக்கு நினைவூட்டுதல்
 • வீட்டு வன்முறை சட்டத்திற்கு முரணானது எனவும் அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெளிவுபடுத்தவும்
 • தேவையாயின், வன்முறைகளைத் தடுப்பதற்காக தொழில்வாண்மை ரீதியான உதவிகளை பெற்றுக் கொள்வதற்கும், தொடர்ந்து அவருடன் இணைந்து பின்னூட்டலை மேற்கொள்வதற்கும் ஊக்குவித்தல்.

2. பாலியல் நடத்தை மற்றும் பாலியல் தனித்துவங்களைக் கவனத்தில் கொள்ளாது அனைவருக்கும் பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் மதிப்புமிக்க சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளுடன் தலையிடுங்கள். பணியிடம் என்பது பெண்கள் மற்றும் வேறு பாலியல் தனித்துவங்கள் கொண்ட நபர்கள் தொடர்ச்சியாக பாரபட்சம் காட்டல், துன்புறுத்தல்கள், அவமதிப்பு மற்றும் பாதுகாப்பற்ற இடமாகவுள்ளது.

 • பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக கொள்கைகளை மாற்றுவதற்கும் அல்லது நடத்தைகளை மாற்றுவதற்கும் ஆண்கள் சவால் விடுப்பதன் மூலம் பாதுகாப்பானதும் மதிப்பு மிகுந்த பணியிடத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் நட்பு வட்டங்களாக ஆண்களுக்கு முக்கியமான வகிபாங்கு வகிக்க முடியும்.
 • எமது சமூகத்தில், ஒரே தொழிலில் பணியாற்றும் பெண்கள்;, ஆண்களை விடக் குறைவான சம்பளத்தையே பெறுகின்றனர். உயரிய பால்நிலைச் சமத்துவத்திற்கான போராட்டங்களில் நட்பு வட்டங்களிலுள்ளவர்கள் ஆண்களுக்குச் சமமான சம்பளத்தை பெண்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்காக ஒத்துழைப்பது வழங்குவது ஒரு சக்திவாய்ந்த முறையாகும்.

3. எமது தொடர்புகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் மனப்பாங்குகள், நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகளில், குறிப்பாக புரிதல் மற்றும் சம்மதங்களுடன் எவ்வாறு ஆண்மைத்துவம் பிரதிபலிக்கப்படுகின்றது என விமர்சன ரீதியாக புரியச் செய்தல்.

4. ஆண் பிள்ளைகள் மற்றும் இளைஞர்களுக்கு முன்மாதிரியானவர்களாக இருத்தல். பால்நிலை சமத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களும் அதற்காக குரல் கொடுக்கும் ஆண்கள் தமது சமூகத்திலுள்ள ஆண் பிள்ளைகளுக்கும் ஆண்களுக்கும் முன்மாதிரியாக இருக்க முடியும். ஆண்களுக்கு முற்கூட்டியே கற்பித்தல் மற்றும் எடுத்துக்காட்டல்கள் தேவைப்படுவதுடன், தொடர்புகளில் வன்முறைகளுக்கு இடமில்லை என்பதையும் அவர்களுக்கு தொடர்ந்து எடுத்துக்கூற வேண்டும்.

5. சமூகம் “இயல்பானது” எனக் கருதும் விடயங்களுக்குப் பெண்கள் அல்லது பால்நிலைத் தனித்து அடையாளங்கள் கொண்டவர்கள் மற்றும்ஃ அல்லது பால்நிலை தன்மைகள் கொண்டவர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதற்கு நண்பர்கள், குடும்ப அங்கத்தவர்களால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் வேண்டும்.

ஆண்களுக்கு ஆண் நண்பர்களுடன் மேற்கொள்ளக் கூடிய விடயமாக, சமூகத்தில் மதிப்பு மிகுந்த, நெகிழ்வான வகிபாங்குகளுடன் கூடிய ஆண்களால் சமூகத்தில் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் எனும் கருத்தை மேம்படுத்த வேண்டும். ஆண்மைத்துவத்துவத்திற்கு சவால் விடுக்கும் போது ஒருவருக்கொருவர் ஒத்துழைக்குமாறு நாங்கள் ஆண்களை அழைக்கின்றோம்.

6. அர்த்தமுள்ள நட்பு வட்டங்களாக ஒத்துழைப்புடனும் கூட்டுப் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றுதல். ஆண்கள் தங்களுடைய சமூகத்தில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பாகத் தெளிவு பெற வேண்டியதுடன், அவ்வாறான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு தமது பலம், நேரம் மற்றும் திறன்களை வழங்க வேண்டும். அவற்றில்,

 • ஆண்மைத்துவத்தை நிலைமாற்றுவதற்காக ஆண்கள் மற்றும் ஆண் பிள்ளைகளுடன் நேரடியாகச் செயலாற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைத்தல்
 • ஆண்மைத்துவத்தை நிலைமாற்றுவதற்காக பொது அரங்கில் சவால் விடுத்தல் அதாவது ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மேற்கொள்ளல். (உதாரணம்: பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளல்)
 • பெண்களுடைய உரிமைகளைக் கோரி செயலாற்றும் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டு இயக்கங்களுக்கு நிதி திரட்டுவதற்கு உதவுதல்
 • தற்போது பெண்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடாமல் அவர்களின் முயற்சிகளுக்கு பெண் நண்பர்களுடன் நட்பு வட்டங்களாக ஒத்துழைப்பு வழங்கல்.

7. நீதித்துறை மற்றும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்தல். வன்முறைகளுக்கு ஆளாகியவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் பொலிஸ் மற்றும் குற்றவியல் நீதித்துறை மீண்டும் மீண்டும் தோல்வி கண்டு வருகின்றது. நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆண்களை இணைத்துக் கொள்வது அவசியமாகும்,

 • அனைவருடைய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசாங்கம் பொறுப்புக் கூறுவதற்கு வேண்டுகோள் விடுத்தல்
 • உயிர் பிழைத்தவர்கள் விருப்பமாயின் நீதிமன்றத்தை நாடலாம்
 • தேவையான சந்தர்ப்பங்களில் சேவை நாடல்களுக்கு உதவுதல்
 • பொலிஸ் மற்றும் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அவர்களின் பொறுப்புக் கூறலை நிலைநாட்டல்

8. பெண்கள், பெண் பிள்ளைகள் மற்றும் ஏனைய பால்நிலைத் தனித்துவங்கள் கொண்டவர்களுக்காக மதிப்பு மிகுந்த இணையவழியை உருவாக்கல் – இணையவழி மற்றும் மெய்நிகர் வழியாக சட்ட விரோதமாக பிரத்தியேகத் தகவல் திரட்டுதல், இணையவழி மூலமாக பிரத்தியேகத்திற்குப் பாதிப்பு ஏற்படல் மற்றும் இணைய வெளியில் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட தீமை பயக்கும் இணைய வெளிப் பயன்பாட்டால் டிஜிட்டல் பாதுகாப்பு சவால் மிக்கதாக மாறியுள்ளது.

பெண்களுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறைகளை தத்தமது தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்ப்பதற்கு அனைத்து ஆண்களையும் ஊக்குவித்தல் வேண்டும். எமது ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்பில் தமது வகிபாங்குகளை ஆராய்வதற்கு ஆண்களை தூண்டுவிக்க வேண்டியதுடன், அநீதிகளைக் காணும் போது அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன்வர வேண்டும். ஒரு சில செயற்பாடுகள் மிகவும் முக்கியமானவையாகும். குறிப்பாக பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைச் சம்பங்கள் மத்தியில் அவர்களின் வகிபாங்குகளுடன் ஒப்பிடுகையில் “சிறந்த ஆண்” எனும் அர்த்தத்தை மிகவும் கீழ் மட்டத்தில் இடப்பட்டுள்ள சமூகத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். துஷ்பிரயோகங்கள் இடம்பெறும் இவ்வாறான மோசமான சூழலைப் புறக்கணிக்க விரும்பும் எவரும், அவர்கள் தங்களின் கண்டும் கானாமல் இருப்பாரென்றால் அவர் இலங்கையில் இருக்கும் இன்னொரு தொற்று நோய்க்கு நேரடியாக தனது பங்களிப்பை செய்பவராகவும் அதற்கான குற்றவாளியாகவும் வரலாற்றில் பதியப்படுவார் என்பதனையும் விமர்சன ரீதியாக சிந்திக்க வேண்டும்.